Help:Description/general principles/ta

This page is a translated version of the page Help:Description/general principles and the translation is 88% complete.

இவை விக்கித்தரவில் விளக்கங்களில் பயன்படும் மொழி சார்பில்லா பொதுக் கோட்பாடுகள் ஆகும்.

மாறக்கூடிய தகவல்களைத் தவிர்க்கவும்

"தற்போதைய", "பதவியில் உள்ள", "எதிர்பார்க்கப்படும்" அல்லது "அடுத்த ஆண்டு" போன்ற மாறிக்கொண்டே இருக்கும் சொற்களையும் சொற்றொடர்களையும் தவிர்க்க வேண்டும். உதாரணமாக, நீங்கள் இராம் நாத்து கோவிந்தை விவரிக்கிறீர்கள் என்றால், "தற்போதைய இந்தியக் குடியரசுத்தலைவர்" என்பதை விட "14வது இந்தியக் குடியரசுத்தலைவர்" என்று பயன்படுத்துவது நல்லது.

விளையாட்டு வீரர்களைப் பொறுத்தவரை, வீரரின் தற்போதைய அணியை குறிப்பிடுவது விவேகமற்றது, ஏனெனில் அதுவும் மாற வாய்ப்புள்ளது. நீங்கள் டேனியல் ஆல்வ்சு பற்றி விவரிப்பதாக இருந்தால், "பார்சிலோனா கழக காற்பந்தாட்ட வீரர்" பயன்படுத்துவதை விட, "பிரேசிலில் உள்ள கழக காற்பந்தாட்ட வீரர்" என்று பயன்படுத்துவது நல்லது.

கருத்து, சார்பு அல்லது விளம்பர வார்த்தைகளைத் தவிர்க்கவும்

நடுநிலை நோக்கு என்பது விக்கித்தரவு, விக்கிப்பீடியா, மற்றும் பிற விக்கிமீடியத் திட்டங்களின் முக்கிய மதிப்பாகும். கருத்து அல்லது பாரபட்சமான சொற்களைத் தவிர்ப்பதன் மூலம் விளக்கங்களை நடுநிலையாக வைத்திருக்க முயற்சிக்கலாம். "அமெரிக்க எழுத்தாளர்" என்பது நடுநிலையான விளக்கமாகும், அதே சமயம் "அமெரிக்காவின் சிறந்த எழுத்தாளர்" என்பது விளம்பர விளக்கமாகும்.

சர்ச்சைக்குரிய கூற்றுகளைத் தவிர்க்கவும்

விளக்கத் தகவல்களைத் துல்லியமாகவும் நடுநிலையாகவும் பிரதிபலிக்க முயற்சிக்க வேண்டும். முடிந்தவரை, விளக்கங்களில் சர்ச்சைக்குரிய கூற்றுகளைச் சேர்ப்பதைத் தவிர்க்கவும். உதாரணமாக, "சப்பானில் உள்ள தீவுகள்" அல்லது "சீனாவில் உள்ள தீவுகள்" என்பதை விட, "கிழக்கு ஆசியாவில் உள்ள தீவுகள்" என்று சென்காகு தீவுகளை விவரிப்பது சிறந்தது.

விக்கிமீடியா பெயர்வெளி மரபுகளைப் பின்பற்றவும்

விக்கித்தரவில் பல வகையான விக்கிமீடியத் தளப் பக்கங்களுக்கான உருப்படிகளைக் கொண்டுள்ளன, இவை தளத்தின் முதன்மை பெயர்வெளிக்கு வெளியே காணப்படுகின்றன (எடுத்துக்காட்டாக, விக்கிப்பீடியக் கட்டுரை அல்லாத பக்கங்கள்). வார்ப்புருக்கள், பகுப்புகள், உதவிப் பக்கங்கள், சிறப்புப் பக்கங்கள் ஆகியவை இதில் அடங்கும். ஒரு உருப்படி விக்கிமீடியத் தள பயன்பாட்டிற்கு மட்டுமே எனில், அந்த தளத்தை விளக்கத்தில் குறிப்பிட வேண்டும். இது வாசகர்கள் சாதாரண உள்ளடக்கத்தை கொண்ட உருப்படி என்பதை ஒரே பார்வையில் தெரிந்துகொள்ள உதவுகிறது.

எடுத்துக்காட்டுகள்:

தலைப்பு: டாப் கியர்
விளக்கம்: விக்கிமீடியப் பக்கவழி நெறிப்படுத்தல் பக்கம்
இந்த உருப்படி டாப் கியர் என்று அழைக்கப்படும் விடயங்களுக்கான விக்கிமீடியப் பக்கவழி நெறிப்படுத்தல் பக்கமாகும்.

Label: Portal:History
Description: Wikipedia portal showcasing content related to the field of history
Although the inclusion of "Portal:" in the title makes it clear to people that are familiar with Wikipedia that this is a Wikipedia portal, not everyone who uses Wikidata will know what that means, so specifying that it is a Wikipedia portal still is a good idea.

விளக்கங்கள் வரையறைகள் அல்ல

உருப்படியால் குறிப்பிடப்படும் கருத்து விளக்கத்தால் அல்ல, அறிக்கைகளால் வரையறுக்கப்படுகிறது. நீங்கள் ஒரு உருப்படியை மற்றொரு உருப்படியிலிருந்து வேறுபடுத்த வேண்டும் என்றால், நீங்கள் ஒரு சிறப்பு விளக்கத்தைச் சேர்ப்பதற்கு முன் ஆதாரங்களுடன் சரியான அறிக்கைகளைச் சேர்க்கவும். உருப்படிகளைத் தேடும் போது, ​​விளக்கம் சரியான தன்மையைச் சார்ந்து இல்லாமல் இருக்கலாம், சரியான உருப்படியைக் கண்டறிந்துள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்த அறிக்கைகளுடன் சரிபார்க்கவும்.